திமுகவின் ஊராட்சி சபை: மதுவிலக்கு கேள்விக்கு பதில் சொல்ல திணறிய மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம் என்பது உள்பட பல வாக்குறுதிகளை கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘மதுவிலக்கு’ குறித்த கேள்விக்கு பதில் கூற தயங்கியுள்ளார்.
தமிழகத்தின் பல இடங்களில் சொல்வேம், வெல்வோம் என்ற கர்ஜனையுடன் ஊராட்சி சபையில் கலந்து கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் கிராமத்தில், திமுக சார்பில் நடைபெற்ற ‘ஊராட்சி சபை – கிராமம் செல்வோம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாஅர்.
இந்த நிகழ்ச்சியின்போது சொக்கம்மாள் என்ற பெண், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவீர்களா என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு நீண்ட நேரம் மெளனம் காத்த மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியாக கூறாமல் ‘நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று ஸ்டாலின் கூறியது அந்த சபையில் கலந்து கொண்டவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது