திமுகவில் இணைந்த செம்மலை எம்.எல்.ஏவால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிந்தாமணியூரில் அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தாக்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் இன்று திமுகவில் இணைந்தார்
சமீபத்தில் அன்புமணியை ஆதரித்து அதிமுக எம்.எல்.ஏ செம்மலை பிரச்சாரம் செய்தபோது அதிமுக தொண்டர் ஒருவர், அன்புமணி ராமதாஸை பார்த்து 5 வருடங்களாக எங்கே போனீர்கள் என கேட்டார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் சரமாரியாக தாக்கினார். இவர் இந்த பகுதி அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் என்பது பின்னர் தெரிய வந்தது
இந்த நிலையில் செம்மலையால் தாக்கப்பட்ட செந்தில்குமார் இன்று திடீரென திமுகவில் இணைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது