திமுகவுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

திமுகவுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது ‘அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி போல், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்றார்

அதேபோல் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம். தமிழகத்திற்கு என்ன செய்வோம் என்று அவர்கள் கூறும் திட்டங்களை பொறுத்தே அவர்களுடன் கூட்டணியா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி, ஆனால் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் வரும் தேர்தல் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கமல்ஹாசன் கட்சி உள்பட ஒருசில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply