திமுகவுடன் கூட்டணி வைக்கிறது மக்கள் தேமுதிக. இன்று மாலை பேச்சுவார்த்தை
மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்ததால் அதிருப்தி அடைந்த சந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் நேற்று மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர். இந்த கட்சியில் கிட்டத்தட்ட 50% தேமுதிக நிர்வாகிகள் உள்ளனர். இந்நிலையில் திமுக அழைத்தால் கூட்டணி அமைப்போம் என்று சந்திரகுமார் கூறியிருந்த நிலையில் இன்று திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “மக்கள் தேமுதிகவினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார். இன்று மாலை நடைபெறும் கருணாநிதி-சந்திரகுமார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்கள் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும் என திமுக தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று வெளியான திமுக தேர்தல் அறிக்கை தங்களுடைய தேர்தல் அறிக்கையை காப்பியடித்துவிட்டதாக பாமக தலைவர் ராமதாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலின் கூறியபோது, இது ஒவ்வொரு தேர்தலின்போது அவர் கூறும் வழக்கமான குற்றச்சாட்டு என்று கூறினார்.