திமுகவும் நமதே! திகாரும் நமதே ! மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
சமீபத்தில் கரூரில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடும் நமதே!… நாற்பதும் நமதே என்று முழங்கினார்.
இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே,!ஊழல் சர்க்கார் நமதே!ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி மு க வும்…நமதே!திகாரும்…நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள்சாதனையையும் மக்கள்மறக்கவில்லை என்று கூறியுள்ளார்