2021ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ய சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர்
கமல்ஹாசன் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வரும் தேர்தலில் அதிமுக,திமுக உள்பட எந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறினார்.
ஏற்கனவே கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்றும், அதனை ஏற்று கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அக்கட்சியின் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது