திமுக-அதிமுக கூட்டணியா? தம்பிதுரை விளக்கம்
திமுக-பாஜக கூட்டணி, அதிமுக -பாஜக கூட்டணி என ஒருபக்கம் வதந்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக எம்பி தம்பிதுரை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தம்பித்துரை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை அதிமுகவைச் சேர்ந்த மு.தம்பிதுரை சந்தித்தது கூட்டணியா? என்று திமுக முன்னாள் அமைச்சர் கேஎன்.நேரு கேள்வியெழுப்பியுள்ளார். நான் தனி விமானத்தில் செல்ல முடியாது. விமான நிலையத்துக்குச் செல்லும்போது மாற்று கட்சி தலைவர்களை சந்திப்பது சகஜமே. இதனை வைத்து கூட்டணி என்று கருத முடியாது.
நானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டோம் என்பதற்காக எங்களுக்கும் திமுகவும் கூட்டணியா என்பதை மு.க.ஸ்டாலின்தான் விளக்க வேண்டும். அல்லது, அதுதொடர்பாக கே.என்.நேருதான் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்” என்றார்.