திமுக ஆதரவுடன் எம்பி ஆகின்றாரா மன்மோகன்சிங்?
தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்பி.யாக்க சோனியா காந்தி முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து சோனியா காந்தி, கனிமொழியிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சு மணன், வி.மைத்ரேயன், டி.ரத்ன வேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2019 ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தில் திமுகவு கூட்டணிக்கு 97 எம்எல் ஏக்கள் உள்ளதால் திமுகவுக்கு 3 எம்பி.க்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதில் இருந்து ஒரு எம்பி பதவியை மன்மோகன் சிங் அவர்களுக்கு வழங்க திமுகவிடம் காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பேசினால் ஸ்டாலின் மறுக்க மாட்டார் என்றே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன