திமுக எம்எல்ஏ திடீர் மரணம்: இடைத்தேர்தல் எப்போது?

திமுக எம்எல்ஏ திடீர் மரணம்: இடைத்தேர்தல் எப்போது?

திருவெற்றியூர் திமுக எம்எல்ஏ வாக கேபிபி சாமி என்பவர் உடல்நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்துள்ளது திமுக கட்சியினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மந்திரிசபையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த கேபிபி சாமி அவர்கள் தற்போது திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆக இருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து திருவொற்றியூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இடைத்தேர்தல் மூலம் இரண்டு சட்டசபை தொகுதிகளை இழந்துள்ள திமுக கூட்டணி இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply