திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவின் விபரம்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற கோரி மனுக்களை கொடுத்து வருவது தெரிந்ததே
அந்த வகையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.