திமுக தலைவருக்கு பேசவே தெரியவில்லை: செல்லூர் ராஜூ

திமுக தலைவருக்கு பேசவே தெரியவில்லை: செல்லூர் ராஜூ

திமுக தலைவருக்கு பேசவே தெரியவில்லை. அதனால் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டமே வருவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமில்லை என்றும், ஒரு காலத்தில் கருணாநிதி பேசுகிறார் என்றால் அப்படி கூட்டம் வரும் என்றும், ஆனால் இன்று ஸ்டாலின் பேசுவதைக் கேட்பதற்கு மக்கள் விரும்பவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மேலும் முன்பு திமுக பேச்சாளர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் இன்று அந்தக் கட்சியின் தலைவருக்கே பேசத் தெரியவில்லை. இதனால் திமுக மூத்த தலைவர்களே மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply