திமுக தலைவர் விஜய்! என்னாங்கடா புது கதையா இருக்கு?
திமுக தலைவர் என்றாலே கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின் அவர்கள் ஞாபகம்தான் வரும். ஸ்டாலினுக்கு பின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் திடீரென விஜய் தான் திமுக தலைவர் என டுவிட்டரில் ஒரு ட்ரெண்டு உருவாகி உள்ளது. பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர்களை ஆலோசனைக்கு அழைத்து வரத் தேவையில்லை என்றும், திமுக தலைவர் பதவியை விஜய்யிடம் கொடுத்துவிட்டால் எதிரி யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்தி திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்
இது உண்மையில் நடக்க கூடிய அளவுக்கு சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்