திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் மு.கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்த தகவலை தெரிந்து கொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் உள்ளனர். காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தும் ஒரு தொண்டர் கூட அந்த இடத்தைவிட்டு நகர்வதாக தெரியவில்லை.
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தனது டுவிட்டரிலும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே, கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல், அமைதி காக்க வேண்டுகிறேன்!
திமுக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: