திமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: முக ஸ்டாலின் அதிரடி

திமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: முக ஸ்டாலின் அதிரடி

வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இப்பொழுதில் இருந்தே ஒருசில அதிரடி நடவடிக்கைகளை திமுக தலைவர் முக ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் திருச்சி மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷை நியமனம் செய்த முக ஸ்டாலின் தற்போது சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்றியுள்ளார்.

இதன்படி சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ஆ ராஜாவுக்கு புதிய பொறுப்பாக திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களும், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம் செல்வகணபதி அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்தி செல்வன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவருக்கு பதிலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply