திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் க. அன்பழகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரனமாக முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வரும் நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் க.அன்பழகன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறியபோது, ‘சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்திருக்கிறார்.’

 

Leave a Reply