திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து கொண்டிருந்த சிவராசு என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திவ்யதர்ஷினி என்பவர் திருச்சி மாவட்ட கலெக்டராக பதவி ஏற்பார்
அதேபோல் திருச்சி மாவட்ட எஸ்பி ராஜன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மயில்வாகனன் பதவியேற்பார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது