திருச்சி விமான நிலைய பிரச்சனை: சீமானை கைது செய்ய தடை
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கும், மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மதிமுக நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சீமான் முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதி, மே 30 வரை சீமானை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்தார். மேலும், தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமான பேசக்கூடாது என சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
எனவே சீமானை வரும் 30ஆம் தேதி வரை போலீசார் கைது செய்ய வாய்ப்பில்லை. ஆனால் இந்த வழக்கில் 30ஆம் தேதிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்