திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள கிரிவலப் பாதையில் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்து ஒரு பெண் பக்தர் பலியான நிலையில் இடிந்துஅ அந்த பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி இன்று அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி கிரிவலப் பாதை பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர்.

இதன் எதிரொலியாக பிரகார மண்டபத்தை இடித்து புதிதாகக் கட்டித்தருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்தின் அறிவித்தார். இதன்படி, இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதனிடையே, மண்டபத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரகார மண்டபத்தின் தென்பகுதியில் கடை அமைத்துள்ள வியாபாரிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply