திருத்தணி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள உப அர்ச்சகர் மற்றும் இசைப்பணி தொடர்புடைய பணிகளுக்கு உரிய கல்வி தகுதி பெற்றவர்கள், நீதிபேரணை பணி எண்.1890/2011 தொடர்புடைய தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் நல சங்கம் சார்ந்தவர்கள், முதுநிலை அல்லாத திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வந்து சேர வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி – 631 209, திருவள்ளூர் மாவட்டம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: நாதஸ்வரம் – 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – ரூ.15,900 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சி பள்ளியில் 3 ஆண்டுகள் நாதஸ்வரம் பயிற்சி பெற்றதற்கான சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் தவில் மற்றும் தாளம் ஆகிய இசைக்கருவிகள் இசைத்தலில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மிருதங்கம் – 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – ரூ.15,900 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சி பள்ளியில் 3 ஆண்டுகள் மிருதங்கம் பயிற்சி பெற்றதற்கான சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் மிருதங்கம் இசைத்தலில் சிறந்த ஞானம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தாளம் – 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – ரூ.15,900 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி தாளம் வாசிக்க அறிந்திருக்க வேண்டும்.
பணி: சுருதி
சம்பளம்: மாதம் ரூ.5,200 – ரூ.15,900 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி சுருதி வாசிக்க அறிந்திருக்க வேண்டும்.
பணி: டமாரம் – 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 – ரூ.15,900 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி டமாரம் வாசிக்க அறிந்திருக்க வேண்டும்.
பணி: உபகோயில் சண்டோல் – 01
சம்பளம்: மாதம் ரூ.4,100 – ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் நாதஸ்வரம் பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். நாதஸ்வரம் இசைத்தலில் சிறந்த ஞானம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உபகோயில் சண்டோல்
சம்பளம்: மாதம் ரூ.2,800 – ரூ.8,400 + தர ஊதியம் ரூ.1,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி சண்டோல் வாசித்தல் அறிந்திருக்க வேண்டும்.
பணி: உபகோயில் நாதஸ்வரம் – 01
சம்பளம்: மாதம் ரூ.4,100 – ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி:தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சி பள்ளியில் 3 ஆண்டுகள் நாதஸ்வரம் பயிற்சி பெற்றதற்கான சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் தவில் மற்றும் தாளம் ஆகிய இசைக்கருவிகள் இசைத்தலில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உப அர்ச்சகர்
சம்பளம்: மாதம் ரூ.2,800 – ரூ.8,400 + தர ஊதியம் ரூ.12,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. அரசு அங்கீகாரம் பெற்ற அல்லகு தகுதி வாய்ந்த ஆகம பயிற்சி பள்ளியில் ஒராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். திருக்கோயில் ஆகம பழக்க வழக்கங்கள் அறிந்திருக்க வேண்டும். அபிஷேகம் ஆராதனைகள் புரிந்ததற்கான அணுபவ சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: உபகோயில் அர்ச்சகர் – 01
சம்பளம்: மாதம் ரூ..2,800 – ரூ.8,400+ தர ஊதியம் ரூ.1,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. அரசு அங்கீகாரம் பெற்ற அல்லகு தகுதி வாய்ந்த ஆகம பயிற்சி பள்ளியில் ஒராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: உபகோயில் அர்ச்சகர் – 01
சம்பளம்: மாதம் ரூ.2,800- ரூ.8,400 + தர ஊதியம் ரூ.12,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது தகுதி வாய்ந்த ஆகம பயிற்சி பெற்ற பள்ளியில் ஒராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: உபகோயில் அர்ச்சகர் – 01
தகுதி: ரூ.2,800 – ரூ.8,400 + தர ஊதியம் ரூ.1,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது தகுதி வாய்ந்த ஆகம பயிற்சி பள்ளியில் ஒராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: உபகோயில் சுருதி – 02
சம்பளம்: மாதம் ரூ.2,800 – ரூ.8,400 + தர ஊதியம் ரூ.1200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி சுருதி வாசிக்க அறிந்திருக்க வேண்டும் .
பணி: உபகோயில் பரிச்சாரகர் – 01
சம்பளம்: மாதம் ரூ.2,800 – ரூ.8,400 + தர ஊதியம் ரூ.1200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதங்கள் தயார் செய்தல் அறிந்திருக்க வேண்டும். பரிச்சாரகர் பணிகள் தொடர்பாக 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிராமண வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
பணி: உபகோயில் சுருதி – 01
சம்பளம்: மாதம் ரூ.2,800 – ரூ.8,400 + தர ஊதியம் ரூ.1,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது தகுதி வாய்ந்த ஆகம பயிற்சி பள்ளியில் ஒராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விரிவான விவரங்கள் அறிய அலுவலக நாட்களில் திருக்கோயில் அலுவலகத்தை அனுகி தெரிந்துகொள்ளவும்.