திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி மனுத்தாக்கல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசை காவலில் எடுக்க கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெறும் என தெரிகிறது. திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைதாகி உள்ளனர் என்பதும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் உள்பட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.