திருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது.
ஆண்டு முழுவதும் பக்தர் கூட்டம் அலை மோதும் உலகப் புகழ்பெற்ற திருத்தலம் திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனால், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் முன்னுரிமை தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதிப்படுகின்றனர். கோயிலிலும் கோயிலுக்குச் செல்லும் வழிகளிலும் பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, விஷ்வசேனதிபதியை சிறப்பு பூஜையுடன் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுச்சென்று அங்குரார்பனம் நடைபெற்றது.