திருப்பதி கோவிலில் தங்கமகள் பிவி சிந்து தரிசனம்

திருப்பதி கோவிலில் தங்கமகள் பிவி சிந்து தரிசனம்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து இன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து பிரசாதம் அளித்தனர்.

சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிவி சிந்து, ‘எதிர்வரும் போட்டிகளிலும் வெற்றி பெற தரிசனம் செய்ததாகவும், அடிக்கடி தான் திருப்பதிக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

பிவி சிந்து தவிர இன்று ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர்களும் தரிசனம் செய்தனர்

Leave a Reply