திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: மீண்டும் ஆர்.கே.நகர் ஃபார்முலாவா?
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் ஆர்.கே.நகர் ஃபார்முலாவை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் கலக்கமும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு, பலத்தைக் காட்ட வேண்டிய அவசியம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சுகளுக்கும் உள்ளது.
குறிப்பாக அழகிரியின் கோட்டையான மதுரை தொகுதியில், ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்வது திமுக-வுக்கு கட்டாயமான ஒன்றாக உள்ளது.
மேலும் புதிதாக களத்தில் குதித்துள்ள கமல்ஹாசன் கட்சி போட்டியிடுமா? ரஜினிகாந்த் என்ன செய்வார்? நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை இந்த இடைத்தேர்தல் தீர்மானிக்குமா? போன்ற கேள்விகள், திருப்பரங்குன்றம் தேர்தல் களத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகின்றன.