திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் உடனே தீர்ப்பா?

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் உடனே தீர்ப்பா?

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுடன் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் உள்பட 3 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு இந்த தொகுதிகள் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதே காரணம் ஆகும்

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க கோரி முறையீடு செய்யப்படுள்ளது. நீதிபதி வேல்முருகன் முன் மனுதாரர் சரவணன் சார்பில் வழக்கறிஞர் அருண் இன்று இந்த முறையீட்டை வழங்கினார்.

சட்டவிரோதமாக ஜெ.கைரேகையை அனுமதித்ததை எதிர்த்து சரவணன் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையீட்டுக்கு பதில் கூறிய சென்னை உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

 

Leave a Reply