திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து. காரணம் இண்டர்நெட்
சவுதி அரேபியா நாட்டில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த இரண்டே மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவாகரத்துக்கு மணமகன் கூறிய காரணம் என்னவெனில், ‘பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், ஸ்நாப்சேட் பேன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களின் திருமண புகைப்படங்களை யாருக்கும் பகிரக்கூடாது என திருமணத்திற்கு முன்பே மணமகன் தனது வருங்கால மனைவியிடம் கூறியிருந்ததாகவும், ஆனால் மணமகனின் சொல்லை மீறி திருமணம் நடந்த சில நிமிடங்களில் மணமகல் தங்களுடைய திருமண புகைப்படங்களை தனது பெண் நண்பர்களுக்கும் ஆண் நண்பர்களுக்கும் ஸ்நாப்சேட் மூலம் பகிர்ந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன், தனது சொல்லை காப்பாற்ற தவறிய தனது மனைவியை விவாகரத்து செய்வதாகவும் கூறியுள்ளார். இந்த தகவலை மணமகளின் சகோதரர் செய்தியாளர்களிடம் சோகத்துடன் கூறியுள்ளார்.
இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டதால் விவாகரத்து கோரியுள்ள மணமகனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.