திருமுருகன் காந்தியை சந்தித்த திமுக தலைவர்

திருமுருகன் காந்தியை சந்தித்த திமுக தலைவர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி அதன்பின் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் தற்போது திருமுருகன் காந்தி விடுதலையாகிஉள்ளார்.

கடந்த மாதம் 24-ம் தேதி அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் வயிற்று வலி, வாயு பிரச்னை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி. அப்போது அவருக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்பதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது திருமுருகன் காந்தியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் விசாரித்ததாக தெரிகிறது.

Leave a Reply