திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம். லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

Arunachala_Deepam-60தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அந்த சமயத்தில் பக்தர்கள் அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷம் போட்டனர். அதே போல் மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்த மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கி உள்ளதால் திருவண்ணாமலை ஏ.டி.ஜி.பி. தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மலை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் 200 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கிரிவலப்பாதையை சுற்றி 34 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உதவிக்காக, மலையில் 6 மருத்துவ குழுவும், நகர்புறத்தில் 18 மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் 34 கேமராவும், நகரில் 32 கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பேருந்துகள் கேமரா மூலம் ஸ்கேன் செய்து கண்காணிக்கப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நகரில் 34 இடங்களில் ஆன்லைன் மூலம் அகன்ற திரை வைக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் மாடவீதிகளில் தலா ஒரு ஆள் இல்லாத விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பலூனில் கேமரா பொருத்தியும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். போக்குவரத்து கழகம் சார்பாக தீபத்திற்காக 2 ஆயிரம் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply