திருவள்ளுவரா? பெரியாரா? திராவிடர்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்: எச்.ராஜா
திருவள்ளுவர் பிரச்சனை கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்த அருவருக்கத்தக்க விவாதங்களும் நடைபெற்று வருகின்றன
இந்த பிரச்சனை குறித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில், ‘ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். சனியன் தமிழ் வேண்டாம் என்றார். திருக்குறளை தங்கத்தட்டில் உள்ள மலம் என்று அருவருக்கத்தக்க முறையில் விமரிசித்தார். தமிழ் மற்றும் திருவள்ளுவரை மதிப்பாதாக இருந்தால் ஈ.வெ.ரா வை ஏற்க மாட்டோம் என திக,திமுக, கம்யூனிஸ்ட்கள் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுகவின் பிடிஆர் தியாகராஜன், ‘நம் மொழியை மதிக்க நாம் என்ன செய்ய வேண்டும், அல்லது கூடாது, என்பதைப் பற்றி, கட்சிக்கு அப்பாற்பட்டு, தமிழர்களுக்கு கட்டளை அளிக்க ஒரு பிஹாரி தேவையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதற்கு தமிழக பாஜகவின் டுவிட்டர் தளத்தில், ‘இதென்ன அதிசயம்? இது தானே தோற்று ஓடும் அறிவாலயம் பயன்படுத்தும் கடைசி ஆயுதம். பஞ்சமி நிலம், மிசா போன்றவற்றை திசைதிருப்ப அபாண்டங்களை அவிழ்த்துவிடும் முன் முன்னாள் அமெரிக்கர் பிடிஆர் தியாகராஜனுக்கும், அவரது தலைமைக்கும், கால்டுவெல்க்கும், ராமசாமிக்கும் இங்கென்ன வேலை என்று சொன்னால் நலம்’ என்ரு பதிவு செய்துள்ளது