திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த அரசியல்வாதி கைது
ஒரு பக்கம் திருவள்ளுவருக்கு ஒரு தரப்பினர் காவி உடையும் இன்னொரு தரப்பினர் அவருக்கு கருப்பு உடையும் அணிவித்து தங்களுடைய வள்ளுவ பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட வள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. வள்ளுவருக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் காவி உடையும் மாலையும் அணிவித்தார்.
இந்த செயலுக்கு இன்னொரு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்ததை அடுத்து பிள்ளையார்ப்பட்டி வள்ளுவர் சிலை அருகே பதட்டம் ஏற்பட்டது
இந்த நிலையில் வள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த அர்ஜூன் சம்பத் சற்றுமுன்னர் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது