திருவாரூரில் கமல் போட்டியா?

திருவாரூரில் கமல் போட்டியா?

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என்றும் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தலைவர் கமல் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருவாரூர் தொகுதியில் கமல் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய கமல் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த ஒரு வருடத்தில் தனது கட்சிக்கு கிடைத்துள்ள மக்கள் செல்வாக்கை அறிய இந்த இடைத்தேர்தல் உதவும் என்றும் இதில் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலில் செயல்படலாம் என்றும் கமல் நினைப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரம், எதிர்க்கட்சியின் பலம் மற்றும் அமமுகவின் பண செல்வாக்கு இவற்றுக்கு முன் கமல் பிரச்சாரம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply