திரைப்பட பைரசி, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்ம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திரையுலகின் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் ஆன்லைன் பைரசி மற்றும் திருட்டு டிவிடி பிரச்சனையை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் திரைப்பட பைரசி மற்றும் காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்திருத்தத்தின்படி இனிமேல் திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது, பிரதிகள் எடுப்பது உள்ளிட்டவை சட்ட விரோதம் என்றும், அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முடியும். மேலும், காப்புரிமை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.