திரையரங்குகளில் 6 காட்சிகள்: பொதுநல வழக்கு இன்று விசாரணை
முறையான அனுமதியின்றி திரையரங்குகளில் அதிகாலை 5 மணி முதல் தினமும் ஆறு காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படுவதால தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக திரையரங்குகளில் 4 காட்சிகள் தான் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கு அதிகமாக காட்சிகள் ஓட்ட வேண்டும் என்றால், அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால் முறையின்றி 6 காட்சிகள் திரையிடப்படுவதாக பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அதில் சீமராஜா, சாமி ஸ்கொயர் மற்றும் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களை பல திரையரங்குகள் காலை 5 மணி முதல் தொடங்கி, தினமும் 6 காட்சிகள் திரையிடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
இன்றைய விசாரணையில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால் அதிகாலை காட்சிக்கு வேட்டு வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.