தீபாவளி அன்று தமிழகத்தில் எப்போது பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் பட்டாசு வெடிக்கும் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்
இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படுத்த முடியாது என்றும், வேண்டுமானால் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானிக்கலாம் என்றும் உத்தரவிட்டது
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவுக்கு நடைமுறைக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என்றும், தீபாவளி நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பவர்களை அரசும் நீதிமன்றமும் எந்த வகையில் கட்டுப்படுத்தும் என்று தெரியவில்லை என்றும் கருத்துக்கள் பரவி வருகிறது