தீபாவளி அன்று புத்தாடை உடுத்தவும் தடை வருமோ? எச்.ராஜா
தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்திருப்பது குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இப்படியே போனால் தீபாவளி அன்று புத்தாடை அணிய தடை விதித்தாலும் விதிக்கலாம் என்று கூறியுள்ளார்
இந்தியா முழுவதும் பட்டாசுகள் தயாரிக்க, பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்ற வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் பட்டாசு தயாரிக்க, பயன்படுத்த தடை இல்லை என்று கூறப்பட்டாலும் இந்த தீர்ப்பில் குறிப்பிட்ட நிபந்தனைகளில் ஒன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்பதுதான். இந்த நிபந்தனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பெரும் அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ராஜபாளையத்தில் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள இந்த நிபந்தனை நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்துவிடுமோ’ என்ற பயம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.