தீபிகா திருமணத்திற்கு 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு

தீபிகா திருமணத்திற்கு 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டபோதிலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த திருமணத்திற்கு வெறும் 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என தீபிகா கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் திருமணம் நிகழ்வு சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என தீபிகா தெரிவித்துள்ளனர்.

Leave a Reply