தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்
சமூக வலைதளமான ட்விட்டர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சம் பக்கங்களை முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஸ் தீவிரவாத அமைப்பு ட்விட்டர் போன்ற சமூக வலைதளங் கள் மூலம் ஆள்சேர்ப்பு நடவடிக் கையில் ஈடுபட்டு வருவதாக கூறப் படுகிறது. மேலும் தீவிரவாதம், பிரிவினைவாதம், இனவாதம் போன்ற சமூக விரோத பிரச்சாரங் களும் சில தீவிரவாத அமைப்பு களால் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தகைய பிரச்சாரங்களை தடுத்து நிறுத்த ட்விட்டர் நடவடிக்கை எடுத்தது. கடந்த 2015, ஆகஸ்ட் 1 முதல் எடுக் கப்பட்ட இந்நடவடிக்கை காரண மாக தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சத்து 36,248 பக்கங்கள் முடக் கப்பட்டுள்ளன. தவிர 2016-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண் டில் மட்டும் 3 லட்சத்து 76,890 பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 1 லட்சத்து 25,000 பக்கங்களும் அடக்கம். இந்த தகவலை அமெரிக் காவின் சிநெட் இணையதளம் உறுதி செய்துள்ளது.