தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது: கமலுக்கு பிரதமர் மோடி பதில்
ஒரு இந்து, தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும், ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்றும் கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர், உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்தவொரு நபரையும் காயப்படுத்துவதையோ, கொலை செய்வதையோ அனுமதிக்காது. அதனால் எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாத எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்குப் பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது