துப்பாக்கி சூடு சம்பவம்: வருத்தம் தெரிவித்தது கடலோர காவல் படை
இந்திய கடலோர் காவல்படை நேற்று ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை இலங்கை நாட்டின் ராணுவம் மட்டுமே துப்பாக்கி சூடு நடத்தி கொண்டிருந்த நிலையில் தற்போது சொந்த நாட்டு ராணுவமே துப்பாக்கி சூடு நடத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீனவர்கள் மீளவே இல்லை
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையம், கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மீனவர்களிடம் இந்திய கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்துள்ளது.
இனிமேல் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாது என்று கடலோர காவல்படை உறுதி அளித்துள்ளது. ஆனாலும் வருத்தம் தெரிவித்தாலும் தங்களுடைய போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கூறி வருகின்றனர்.