துருவ் விக்ரமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்: முதல் படத்திலேயே பிரச்சனையா?
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்யவர்மா’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது
இந்நிலையில் இந்த படத்தில் அதிகப்படியான புகை பிடிக்கும் காட்சியும் மது அருந்தும் காட்சிகளும் இருப்பதாக கூறி மத்திய அரசு துருவ் விக்ரமுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நோட்டீஸ் பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் இருந்து வந்துள்ள இந்த நோட்டீசில் இதுபோன்று அதிகமாக மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் அதிகப்படியான மது அருந்தும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை சட்டப்படி தவறு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேபோல் ராதிகா சரத்குமார் அவர்கள் ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற படத்தில் சுருட்டு பிடித்ததற்கும் அதில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது