தூத்துகுடி வன்முறை: 20 அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ

தூத்துகுடி வன்முறை: 20 அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது திடீரென கலவரம் வெடித்தது. போராட்டம் செய்த மக்களோடு மக்களாக சமூக விரோதிகள் ஊடுருவியதால் இந்த வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டாது.

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இதனையடுத்து சிபிஐ சார்பில் தற்போது முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 20 அமைப்புகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணையை தொடங்கி இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply