தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இன்று முதல் மீண்டும் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராக 47 பேருக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஒருநபர் ஆணையம் பலகட்டங்களாக துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை நடத்தி வரும் நிலையில் இன்று 10ஆம் கட்ட விசாரணை நடைபெறவுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே-22ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் வெடித்த கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது