தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்
சருமத்தை பொலிவுடனும், தூய்மையுடனும் வைத்திருக்க விரும்பும் பெண்கள் வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பலன் பெறலாம்.
அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்திருக்கும்.. அவை என்னவென்று காண்போம்.
தங்கம் போல் தோற்றம் பெற : வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூடாது. நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும். தினமும் முடியாவிட்டாலும் வாரம் 3 நாட்கள் உபயோகியுங்கள். அற்புதமான மூலிகை மருந்து இது. குறிப்பாக வெயில் காலத்தில் பயன்படுத்துங்கள்.
வறண்ட சருமம் பெற்றவர்கள் : வறண்ட சரும பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்துவிடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது