தென்கொரியாவில் பிரதமர் மோடி பெற்ற விருந்து

தென்கொரியாவில் பிரதமர் மோடி பெற்ற விருந்து

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டின் யோன்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில்ல் நரேந்திர மோடியும், தென் கொரிய அதிபர் மூன் ஜே அவர்களும் கலந்து கொண்டனர். இந்த பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை மோடி திறந்து வைத்தார். பின்னர் தென் கொரியாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. உலகளாவிய அமைதி, ஏழை எளிய மக்களுக்கு இடையேயான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்ததற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்பிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகமே கைகோர்த்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்

Leave a Reply