தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவு

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவு

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8:22 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவானது. முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 31 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்றுதிரண்டனர். சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்க

Leave a Reply