தெலங்கானா முதல்வரை திடீரென சந்திக்க மறுக்கும் ஸ்டாலின்!
மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த் நிலையில் வரும் 13ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரம் ஒதுக்க வில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில் 3வது அணி முயற்சியில் இருக்கும் ஒரு தலைவரை சந்திப்பது பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் அவர் சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது