தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு காலி
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது
இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் ஆளும் ராஷ்ட்ரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த 12 எம்.எல்.ஏக்களும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளார். அவ்வாறு இணைக்கப்பட்டுவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநிலத்தில் வெறும் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது