ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு எதிராக இன்று டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தர்ணா போராட்டத்தை நடத்திய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவை பிரிப்பதன் மூலம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆந்திராவிலும், மத்தியிலும் ஆட்சியை பிடிக்கலாம் என சோனியா காந்தி கனவு காண்கிறார். ஆனால் தெலுங்கானா பிரிவு ஏற்பட்டால் ஆந்திராவில் இத்தாலி காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கொடுத்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி மோடிக்கு ஆதரவு கொடுக்கத்தயார் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
தர்ணாவை தொடர்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக ஜெகன்மோகன் ரெட்டி சென்றதால் டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர். ஜெகன்மோகனின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெல்லியின் சில பகுதிகளில் மெட்ரோ ரயில் ரத்து செய்யப்பட்டு ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.