தெலுங்கு தேச எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா! முதல்வர் மிது அதிருப்தியா?
ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ ராவல கிஷோர்பாபு என்பவர் திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் தனக்கு மரியாதை இல்லை என்றும் தனது அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் ராவல கிஷோர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியபோது, ‘“கிஷோர்பாபு எம்.எல்.ஏ. எனது அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி இருக்கிறார். நான் திருப்பதியில் இருந்து சென்றதும் அந்த கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.