தேங்காய் பாயசம் செய்வது எப்படி?

தேங்காய் பாயசம் செய்வது எப்படி?

12என்னென்ன தேவை?

பச்சரிசி ஒரு கப்

வெல்லம் முக்கால் கப்

ஏலக்காய் 2

நெய், முந்திரி, திராட்சை சிறிதளவு

தேங்காய்த் துருவல் ஒரு கப்

எப்படிச் செய்வது?

பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பச்சரிசி தேங்காய் கலவையை அதில் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறுங்கள். நன்றாக வெந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேருங்கள். துருவிய வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் இறக்கிவையுங்கள். விரும்பினால் ஆறியதும் சிறிதளவு பால் சேர்க்கலாம்.

Leave a Reply