தேமுதிகவின் 6வது கட்ட வேட்பாளர் பட்டியல். விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு.
மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக மொத்தம் 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவற்றில் ஏற்கனவே ஐந்துகட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட விஜயகாந்த் தற்போது 6வது கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் 6வது வேட்பாளர் பட்டியலில் விபரம் வருமாறு:
1) உளுந்தூர்பேட்டை – விஜயகாந்த்
2) சங்கராபுரம் – கோவிந்தன்
3) உடுமலைப்பேட்டை – கணேஷ்குமார்
4) விழுப்புரம் – வெங்கடேசன்
5) மேட்டூர் – பூபதி
6) ஆத்தூர் – பாக்கியா செல்வராஜ்
7) மன்னார்குடி- முருகையன்பாபு
8) ரிஷிவந்தியம் – வின்சென்ட் ஜெயராஜ்
9) விராலிமலை – கார்த்திகேயன்
10) திண்டிவனம் – உதயகுமார்
11) ஒரத்தநாடு – டாக்டர் ப.இராமநாதன்
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், தற்போது உளுந்தூர்போட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மக்கள் நலக்கூட்டணியின் இன்னொரு கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 11 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:
1) சோழிங்கநல்லூர் – பன்னீர் தாஸ்
2) செய்யூர் – எழில் கரோலின்
3) சேலம் தெற்கு – ஜெயசந்திரன்
4) ராசிபுரம் – க.அர்ஜுன்
5) புவனகிரி – சிந்தனைச் செல்வன்
6) குன்னம் – ஆளூர் ஷாநவாஸ்
7) மயிலம் – பாலாஜி
8) வந்தவாசி – மேத்தா ரமேஷ்
9) துறையூர் – ஆதிமொழி
10) வேலூர் – அப்துல் ரகுமான்
11) ஊத்தங்கரை – கனியமுதன்